அரசுப் பள்ளியில் ஆசிரியரை கத்தியால் தாக்கிய சகோதரர்

x

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே, சொத்து தகராறில், அரசுப் பள்ளியில் புகுந்து, ஆசிரியரை கத்தியால் தாக்கிய சகோதரனை போலீசார் கைது செய்தனர்.


கோலியனூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடராஜன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு வந்த நடராஜனிடம், அவரது சகோதரர் ஸ்டாலின், சொத்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது நடந்த தகராறில், ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால், நடராஜனின் கை மற்றும் முதுகு பகுதியில் தாக்கியுள்ளார். அதனை தடுக்க முயன்ற பள்ளி மாணவனுக்கும், கை விரலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரில், ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்