பிரிட்டனில் 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நேரத்தை வாரத்தில் 4 நாட்கள் என குறைத்துள்ளது.

x

பிரிட்டனில் 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நேரத்தை வாரத்தில் 4 நாட்கள் என குறைத்துள்ளன.

உலகில் பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளன. இதனால் மற்ற நாட்களில் பணி நேரம் நீட்டிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு நடவடிக்கையும் கிடையாது எனவும் அந்நிறுவனங்கள் அறிவித்திருப்பது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100 நிறுவனங்களில் பணியாற்றும் 2 ஆயிரத்து 600 பணியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 4 நாட்கள் வேலை என்ற மாற்றத்தில் இணைந்திருக்கும் அவின் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதம் ரோஸ் பேசுகையில், நிறுவனத்தின் வரலாற்றில் தான் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும் என நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்