பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு

x

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவி காலத்தை, மேலும் நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவராக இருந்த ஜேபி நட்டா 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கட்சியின் தேசிய தலைவராக பெறுப்பேற்றார். தேசிய தலைவருக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்பதால், வரும் ஜனவரி 20ம் தேதியுடன் நட்டாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த சூழலில் அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தலும், குஜராத், இமாச்சல பிரதேசம், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற உள்ளன. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த சூழலில், ஜேபி நட்டாவின் தேசிய தலைவர் பதவி காலத்தை, மேலும் நீட்டிக்க பாஜக முடிவெடுத்துள்ளது. தேர்தலை ஜேபி நட்டாவின் தலைமையில் சந்திக்கவும் பாஜக தயாராகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்