பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து.. தாய், மகளின் உயிரை பறித்துவிட்டு நிற்காமல் சென்ற கார்

x

வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு காருடன் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வண்டலூர் மேம்பால பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், கூடுவாஞ்சேரி விஸ்வலிங்கபுறத்தை சேர்ந்த உமாமகேஷ்வரி என்பவரும், அவரது மகள் கிருத்திகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்