1 டைம் போனுக்கு சார்ஜ் போட்டதால் வங்கியிலிருந்து பறிபோன ரூ.3.50 லட்சம்- நபருக்கு நடந்த பகீர் சம்பவம்

x

சென்னையில் சார்ஜ் போட செல்போனை கொடுத்த நபரின் வங்கிக் கணக்கில் இருந்து மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை திருடிய பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தி.நகரில் துணிக்கடையில் வேலை பார்த்து வரும் சாகுல் ஹமீது என்பவரின் வங்கிக்கணக்கில் இருந்த 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நடந்த விசாரணையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை சிறுக சிறுக பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

அப்போது செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது வேறு செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணிலிருந்து பல வங்கி கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டது தெரிய வந்தது.

அப்போது அந்த செல்போனுக்கு உரியவர் தி.நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் நானா முகமது என தெரியவந்தது.

இவரது பெட்டிக்கடையில் சாகுல் ஹமீது சார்ஜ் போட வந்த போது அவரது போனில் இருந்த சிம்கார்டை எடுத்து பணத்தை திருடியது உறுதியானது.

இதன்பேரில் நானாமுகதிடம் இருந்த பணத்தை மீட்ட போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்