டிரோன் மூலம் வந்த பை...உள்ளே இருந்த சீன துப்பாக்கி...இந்தியா - பாக். எல்லையில் பதற்றம்

x

காஷ்மீர் எல்லையில் டிரோன் மூலம் அனுப்பப்பட்ட 5 லட்சம் ரூபாய் ரொக்க பணம், வெடிகுண்டு, துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வபோது அனுமதியில்லாமல் பறக்கும் டிரோன்களை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் சம்பா மாவட்டத்தின் ராம்கார் கிராமத்தில் டிரோன் ஒன்று பறப்பதை போலீசார் பார்த்துள்ளனர். அந்த டிரோன் கீழே போட்ட பையில் 5 லட்சம் ரூபாய் பணம், இரு சீன துப்பாகிகள், தோட்டாக்கள், இணைக்கப்படாத வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்ஸ் மற்றும் பேட்டரிகள் உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது. பணத்தையும், வெடிப்பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் எல்லை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததால் நாச வேலைகளுக்கு திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்