கூலித்தொழிலாளியின் மகளை கரம்பிடிக்க இந்தியா வந்த ஆஸ்திரேலிய காதலன்.. நாடு, இன, மொழிகளை ஜெயித்த காதல்

x

சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலாளியின் பெண்ணை திருமணம் செய்வதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து இளைஞர் ஒருவர் வந்த சுவாரசிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

தார் மாவட்டத்தை சேர்ந்த சித்திக் உசேன் சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவரது மகள் தபஸ்ஸுன் உசேன் சிறப்பாக படித்ததால், ஆஸ்திரேலியாவில் கல்லூரி படிப்பை தொடர 45 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையை மாநில அரசு வழங்கியுள்ளது. அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்ற தபஸ்ஸுன் உசேனிற்கு, அதே கல்லூரியில் படித்த ஹான்ஸ்சைல்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலர்களாக மாறிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு வந்த ஹான்ஸ்சைல்டு, பெற்றோர் சம்மதத்துடன் இந்திய பாரம்பரிய முறைப்படி தபஸ்ஸுன் உசேனை கரம்பிடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்