ஆசியாவின் 2-வது உயரமான ஆர்ச் அணை.. தண்ணீர் திறந்துவிடும் டாப் வியூவ்

x

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது இடுக்கி அணை. குறவன் குறத்தி என்ற இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது இடுக்கி அணை.ஆர்ச் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த இடுக்கி அணை ஆசியாவிலேயே மிகப் பெரிய இரண்டாவது ஆர்ச் அணை ஆகும்.இந்த அணை கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டு இடுக்கி அணை பயன்பாட்டுக்கு வந்தது.இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும்.இந்த அணை நீர் மின்சார உற்பத்திக்காக மட்டும் பயன்படும் அணைஆகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் இருந்து இடுக்கி மாவட்டம் மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்படுகிறது.இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும். இடுக்கி அணையின் நீர்பிடிப்பு பகுதியில், கடந்த ஒரு வாரமாக பெய்த கடும் மழையால் நீர்மட்டம் உயர்ந்தது. அதோடு, முல்லை பெரியாறு அணை நேற்று முன் தினம் திறக்கப்பட்டு பெரியாறு ஆறு வழியாக தண்ணீர் இந்த அணைக்கு வந்ததால் நீர்மட்டம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து, அணையின் மொத்த கொள்ளவான 554 அடியில், நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 528 அடியாக உயர்ந்ததால் 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது.இந்நிலையில், இன்று இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதன் படி மூன்றாவது ஷட்டர் வழியாக 70 செ.மீட்டர் மதகு உயர்ந்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்