உதவி பேராசிரியர்கள் நியமன விவகாரம்...- "10% இடஒதுக்கீடு பொருந்தாது" - அமைச்சர் பொன்முடி

x

உதவி பேராசிரியர்கள் நியமன விவகாரம்...- "10% இடஒதுக்கீடு பொருந்தாது" - அமைச்சர் பொன்முடி

கல்லூரி உதவி பேராசிரியர்கள் 5 ஆயிரத்து 408 பேருக்கு இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே இடத்தை இரண்டு அல்லது மூன்று பேர் தேர்வு செய்தால், பணி மூப்பு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படும் என்றார். மேலும், கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் உயர் வகுப்பினற்கான 10 சதவீத இடஒதுக்கீடு பொருந்தாது என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்