"அடுத்த 3 ஆண்டுகளில் 5 அமைச்சர்கள்..." - அடித்து சொல்லும் அண்ணாமலை

2024ஆ ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் 25 எம்பிக்கள் டெல்லிக்கு செல்வார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x

பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை குறித்து விளக்கும் பொதுக்கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அண்ணாமலை, வரும் காலங்களில் இந்தியாவிற்கு வெளிநாட்டவர்கள் வேலை தேடி வருவார்கள் என்றார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜகவுக்கு 25 எம்பிக்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினால், 5 அமைச்சர்கள் கிடைப்பாளர்கள் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்