திடீரென ரயில் முன் பாய்ந்த முதியவர் - கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்க இருந்த சோகம்

x

ஒடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற முதியவர் ரயில் எஞ்சின் guard-ன் சாதூர்யத்தால் உயிர் பிழைத்த சம்பவம் திருத்தணியில் நிகழ்ந்துள்ளது...

திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட போது, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முதியவர் ஒருவர் முயற்சித்துள்ளார்... இதை ரயிலின் பின்புறம் இருந்த எஞ்சின் guard பார்த்து விட்ட நிலையில், உடனடியாக அவர் எஞ்சின் ட்ரைவரை உஷார் படுத்தியுள்ளார்...

துரிதமாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் முதியவர் காயங்களுடன் உயிர் தப்பினார்...

தொடர்ந்து முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயன்றது காஞ்சியைச் சேர்ந்த சண்முகம் என்பதும், குடும்ப தகராறு காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்