இலங்கையில் அனைத்து கட்சி ஆட்சி முறை?... இலங்கை அதிபர் தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை

x

அனைத்துக் கட்சி அரசாங்கம் என்ற வரையறை நடைமுறைக்கு ஒவ்வாத பட்சத்தில் அனைத்துக் கட்சி நிர்வாக ஆட்சி முறையை கொண்டுவர உள்ளதாக அதிபர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பான கலந்துரையாடலில், 1941ல் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி, எதிர்க்கட்சி நிலையையும் வகித்துக் கொண்டு அமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொண்டது. இதன்படி முழு நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாற்றப்பட்டது. அதே முறையை இலங்கையிலும் செயல்படுத்தலாம் என அதிபர் குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணம் தமக்கு இல்லையென்றாலும் எதிர்கால பொருளாதார திட்டங்களின்போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்