ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர்களை அடித்துக் கொலை செய்த 5 காவலர்கள் - போராட்டத்தில் குதித்த மக்கள்

x

அமெரிக்காவில் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞருக்காக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்... மெம்ஃபிஸ் நகரில் போக்குவரத்து விதியை மீறியதாகக் கூறி போலீசாரால் இடைமறிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர் நிக்கோல்ஸ்-ஐ 5 காவலர்கள் அடித்துக் கொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது... சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நிக்கோல்சின் இறப்பிற்கு நீதி கேட்டு மெம்ஃபிஸ் நகரில் பொதுமக்கள் ஏராளமானோர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்