"ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக..." ஈ.பி.எஸ் பெருமிதம்

x

அதிமுக, ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும், மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்து வருவதாகவும், ஆளுங்கட்சி, மக்கள் குறித்து சிந்திக்காமல், தங்களது குடும்பத்தை பற்றியே சிந்தித்து வருவதாகவும் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்