பின் வாங்கிய TNEB தொழிலாளர்கள் - போராட்டம் வாபஸ்..!

x

மின்வாரிய தொழிலாளர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

பிபி நம்பர் டூ, ரி டிப்ளாய்மெண்ட், அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்சார ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அலுவலகத்திற்கு வந்து பணிக்கு செல்லாமல், கையெழுத்திடாமல் நடைபெற்ற இந்த போராட்டம், நேற்று இரவு 9 மணி வரை நடைபெற்றது. நேற்று மாலை 14 தொழிற்சங்கங்கள் உடன், மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை நடைபெறும் மின்வாரிய கூட்டத்தில், பி.பி.என் இரண்டை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, வாரிய தலைவர் ராஜேஷ் லகானி மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்நிலையில் மின்வாரிய தொழிலாளர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்