புதைத்து பாலூத்திய பிறகு.. உயிருடன் நடந்து வந்த மூதாட்டி - அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்

x

அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் கூடுவாஞ்சேரியில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவர், தனது மகன் வடிவேலுவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சென்ற சந்திரா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில், காலை 8.30 மணியளவில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இதில் இறந்து போனவரின் உருவமும், சந்திராவின் உருவமும் ஒத்து போனதால் உயிரிழந்தது சந்திரா தான் என அவரது உறவினர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். பின்னர், இறுதி மரியாதை செய்து அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்,. இந்நிலையில், உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி சந்திரா, உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்