நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

நடிகை மீனாவின் கணவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
x

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வித்யாசாகர் என்பவரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டு சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். சமீபகாலமாக கொரோனா தொற்று காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு, திரையுலகத்தினர் பலர், தங்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்