நள்ளிரவில் அவசர அவசரமாக நடிகை தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி - பதறிப்போன ரசிகர்கள்

x

புகழ்பெற்ற பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

தீபிகா படுகோன் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீபிகாவை அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து "புரொஜெக்ட் கே" என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தீபிகாவுக்கு திடீரென்று இதயத்துடிப்பு அதிகரித்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

இதைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீபிகா தற்போது நலமாக இருப்பதாக நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபிகா நடிப்பில் உருவான சர்கஸ், பதான், தி இன்டர்ன் உள்பட சில படங்கள் வரிசைகட்டி வெளியாக தயாராகி வருகின்றன.

அதேபோல் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்