சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆரோன் பின்ச் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி

x

ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், தனது கடைசி ஒருநாள் போட்டியில் 5 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்துடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஃபின்ச் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், இன்றையப் போட்டியில் டிம் சவுத்தி பந்துவீச்சில் 5 ரன்களுக்கு ஃபின்ச் கிளீன் போல்டு ஆனார்.

ஃபின்ச் பெவிலியன் திரும்பியபோது, ரசிகர்கள் எழுந்துநின்று உற்சாகமாக கைதட்டினர்.

146 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஃபின்ச், 17 சதத்துடன் 5406 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்