ஏர்போர்ட்டுக்கு அழகிய பெண் குரலில் வந்த மிரட்டல் கால்.. கோவையில் பதற்றம்

x

கோவை விமான நிலையத்துக்கு பெண் குரலில் வந்த மிரட்டல் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர், தமிழகத்தில் உள்ள ஏழு தாஜ் ஹோட்டல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, பெண் குரலில் கூறியதாக தெரிகிறது. இது குறித்து பீளமேடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த மருத்துவர் எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்தது. இதனிடையே, உதவி ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விமான நிலையத்துக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்