திடீரென பாய்ந்து முகத்தில் கடித்த தெரு நாய்...பைக் டயர் மாற்றியவருக்கு நேர்ந்த பயங்கரம்

x

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தின் டயரை மாற்றி கொண்டிருந்த நபர் மீது, தெருநாய் தாக்கி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முரளிதரன் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தின் டயரை மாற்றி கொண்டிருந்த போது, திடீரென வந்த தெருநாய் ஓன்று அவரை தாக்கி, முகத்தில் கடித்தது. முரளிதரன் தப்பிக்க ஓடிய போது, நாய் அவரது தொடர்ந்து கடித்த நிலையில், அருகில் இருந்த பம்பை எடுத்து நாயை விரட்டியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்