புடினுக்கு பலத்த நெருக்கடி… ரஷ்ய விமான தளத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

x

தங்கள் நாட்டு விமானதளங்கள் மீது, உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. தெற்கு - மத்திய ரஷ்யாவில் உள்ள ரியாசான் மற்றும் சரடோவ் ஆகிய விமான தளங்களை உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்கியதாகவும், இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 2 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அரசு பொறுப்பேற்காத நிலையில், தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களின் சாட்டிலைட் காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்