என்ஐஏ சோதனையால்.. கேரளாவுக்கு வந்த புதிய சிக்கல்

x

கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்ததை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வரும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருபகுதியாக, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து தினமும் கேரளாவுக்கு அனுப்பப்படும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

இதனால், கடைகளுக்கு முன்பாக காய்கறி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று சந்தை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்