மாதாந்திர சீட்டு நடத்திய நபரை கடத்திய மர்ம கும்பல் - போலீசார் வலை

x

மாவட்டம் செய்யாறு அருகே, மாதாந்திர சீட்டு நடத்தி வரும் நபரை, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்யாறு அருகே நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து மாதாந்திர சீட்டு மற்றும் சிறிய அளவிலான பைனான்ஸ் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், பெருங்கட்டூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய ராமச்சந்திரனை, காரில் பின்தொடர்ந்த கும்பல் ஒன்று வழிமறித்து, அவரை கடத்திச் சென்றது. பின்னர் ராமச்சந்தரனின் சகோதரரான ரவிச்சந்திரனுக்கு போன் செய்து 50 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என மர்மகும்பல் மிரட்டியுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் மர்மநபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பிரம்மதேசம் பாலாற்று படுகை அருகே ராமச்சந்திரன் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார். தன்னிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் தங்கச் சங்கிலியை கும்பல் பறித்துக் கொண்டு விட்டதாக புகார் அளித்த நிலையில், தனிப்படை அமைத்து மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்