காதலி பேசாததால் ஆத்திரம்..கழுத்தை அறுத்த காதலன் - மனம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற காதலன்

x

காதலி பேசாததால் ஆத்திரம்..கழுத்தை அறுத்த காதலன் - மனம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற காதலன்


திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வனசந்தியா மற்றும் ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக், ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


காதல் விவகாரம் வனசந்தியாவின் தந்தைக்கு தெரியவரவே, மகளைக் கண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கார்த்திக்கிடம் வனசந்தியா பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வனசந்தியாவை சந்திக்க வீட்டிற்கு சென்ற கார்த்திக், தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.


அப்போது, ஆத்திரமடைந்த கார்த்திக், மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியா கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வனசந்தியாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இதனிடையே, வீட்டிற்கு வந்த கார்த்திக், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்