'ஸ்மைல் ப்ளீஸ்' செல்பி வித் ராட்சஸ அலை.. புயலிலும் photo எடுக்க சுத்தும் கும்பல்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்தனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்ட நிலையில், பல மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தன. இதனால், கடற்கரையோரத்தில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும், எச்சரிக்கையை மீறி, தரங்கம்பாடி கடற்கரையில், பொதுமக்கள் கோட்டைச் சுவர் மீதும், கற்கள் மீதும் ஏறி நின்று ஆபத்தை உணராமல் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துச் சென்றனர்.
Next Story