வீணாகும் பொருட்களில் உருவான பிரமாண்ட வீணை | 28 அடி நீள வீணையை உருவாக்கிய கலைக்குழு | Veena

x

மத்திய பிரதேசத்தில் வீணாகும் பொருட்களை வைத்து 28 அடி நீளம் கொண்ட பிரமாண்ட வீணையை, 15 பேர் கொண்ட கலைக்குழு உருவாக்கியுள்ளது. இளைய சமுதாயத்தினருக்கு இசை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பிரமாண்ட வீணையை கலைக்குழு வடிவமைத்துள்ளது. வீணாகும் வாகனங்களின் பொருட்களை வைத்து 28 அடி நீளம், 12 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ருத்ர வீணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 லட்சம் ரூபாய் வரை செலவிட்டதாக கூறும் கலைக்குழு, இந்திய கலாச்சாரம் குறித்து வருங்கால தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்