இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (23-09-2022) | Night Headlines

x

செப். 26-ல் அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், வருகிற 26ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்...

ஜெயலலிதா மரண விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை...

---------------------------

பெட்ரோல் குண்டுகள் வீச்சு - கோவையில் பதற்றம்

கோவையில் பாஜக அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில், அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம்...

பாதுகாப்பு பணியில் கூடுதலாக 400 போலீசார் இன்று குவிப்பு...

தொண்டர்களின் மன தைரியத்தை குறைத்து விட முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்...

---------------------------

"காங்., தலைவர் பதவி - ராகுல் போட்டியில்லை"

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிடவில்லை...

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ashok gehlot இன்று தகவல்...

---------------------------

"தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றும்"

தி.மு.க.வின் மொத்த கலாச்சாரமே ஊழல் தான் என

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு...

தமிழகத்தில் நிச்சயம் பா.ஜ.க. கால் ஊன்றும் என்றும் இன்று நம்பிக்கை...

---------------------------

அக்.14 - அக். 20 வரை ஆசிரியர் தகுதி தேர்வு

அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு...

தேர்வு அட்டவணை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவிப்பு...

---------------------------

பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

பரந்தூரில் விமானநிலையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு...

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் 4 கிராம மக்கள் இன்று நூதன போராட்டம்...

---------------------------

வலுக்கும் போராட்டம் - 31 பேர் பலி

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பல்வேறு இடங்களில் பெண்கள் மாபெரும் போராட்டம்...

பாதுகாப்பு படையினர் - போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததால் பரபரப்பு...

இதுவரை 31 பேர் உயிரிழந்திருப்பதாக, ஈரான் மனித உரிமை அமைப்புகள் அதிர்ச்சி தகவல்...


Next Story

மேலும் செய்திகள்