7 மாத கர்ப்பிணி பெண் தீவைத்து கொலை செய்ய முயற்சி - கணவர், மாமியாருக்கு போலீசார் வலைவீச்சு

கன்னியாகுமரியில், வரதட்சணை கொடுமையால் 7 மாத கர்ப்பிணி பெண், தீவைத்து கொலை செய்ய முயன்ற சம்பவத்தில், கணவர் மற்றும் மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
x

கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை பகுதியை சேர்ந்த அருணிமாவுக்கும், அஜய் பிரகாஷ் என்ற ராணுவ வீரரருக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தற்போது, அருணிமா 7 மாத கர்ப்பிணியா இருந்து வந்த நிலையில், மாமியார் லதா மற்றும் கணவர் பிரகாஷ் ஆகியோர், அருணிமாவிடம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்படவே, திடீரென அருணிமாவின் உடலில் தீப்பற்றி எரிந்தபடி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அருணிமாவின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், 60 சதவீத தீக்காயம் காரணமாக, வயிற்றில் இருந்த குழந்தையை, இறந்த நிலையில் மருத்துவர்கள் மீட்டனர். அருணிமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தன்னை கணவரும், மாமியாரும் தீவைத்துக் கொலை செய்ய முயற்சித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். அதன் பேரில், தலைமறைவான லதா மற்றும் பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்