2,400 கோடி... பிரமாண்டமாக தயாராகும் சென்னை விமான நிலையம்... - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

x

2,400 கோடி... பிரமாண்டமாக தயாராகும் சென்னை விமான நிலையம்... - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி


சென்னை விமான நிலைய விரிவாக்க முனையத்தை ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 2,400 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த இந்திய விமான நிலைய ஆணையக தலைவர் சஞ்சீவ் குமார், விரிவாக்கப்பட்ட முனையத்தை ஆய்வு செய்தார். இந்த பணிகள் முடிந்ததும், டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக்க முனையத்தை திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்