காதலித்த இளைஞருடன் 11ஆம் வகுப்பு மாணவி ஓட்டம்?பெற்றொர் எடுத்த வீபரீத முடிவு

x

சேலத்தில் பள்ளி மாணவி காதலித்த இளைஞருடன் சென்றதால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், விஷம் குடித்து தற்கொலை முயன்ற நிலையில், தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, இளைஞர் ஒருவர் காதலித்து வந்த‌தாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் அந்த இளைஞரை எச்சரித்தும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத‌தால், பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்