"தமிழகத்திற்கு 10 பில்லியன் டாலர் முதலீடுகள்" - அமைச்சர் பழனிவேல் தியாகாராஜன்

x

இதில் சிறப்பு விருந்தினராக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், கடந்த 18 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளதன் மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொழில் தொடங்க உகந்த மாநிலமாக 14வது இடத்தில் இருந்த தமிழகத்தை 3வது இடமாக முன்னேற்றி உள்ளதாக பெருமிதம் தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசு தகுந்த நிதிநிலைமை நடவடிக்கைகளை எடுத்ததால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்