இன்றைய தலைப்பு செய்திகள் (25-01-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு..

மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிப்பு..

ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் நன்றி..

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தீவிரமான கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கே.எஸ்.அழகிரி வரவேற்பு..


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளதாக ஓபிஎஸ் தகவல்..

நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் இன்றும் தொடர் ஆலோசனை..

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அமைச்சரே, சட்டம் ஒழுங்கை சீரழிக்கிறார்..

அமைச்சர் நாசர் தொண்டரை நோக்கி கல் எறிந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று விமர்சனம்..

ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் அறிவிப்பு..

தேசிய வாக்காளர் தின விழாவில் இன்று வாழ்க தமிழ்நாடு எனக்கூறி உரையை முடித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி..

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி வந்த எகிப்து அதிபர் அல்-சிசிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இன்று நேரில் வரவேற்பு..

சென்னையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரத்து 800 போலீசார்...


Next Story

மேலும் செய்திகள்