தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையில் பரபரப்பு தகவல் "ஒரே போலீஸ்காரர் 17ரவுண்ட் துப்பாக்கி சூடு"

x

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையில் பரபரப்பு தகவல் "ஒரே போலீஸ்காரர் 17ரவுண்ட் துப்பாக்கி சூடு"


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் உட்பட - 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையில்,அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உள்பட 17 - போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17- - ரவுண்ட் சுட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே போலீசாரை 4 - இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்து கொண்டு போலீசார் சுட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய ஆட்சியர் வெங்கடேஷ் தனது பொறுப்புகளை தட்டி கழித்து விட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் என்றும் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார் எனவும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்