கிராமத்தையே விழுங்கத் துடிக்கும் கடல்..."சிட்டிசன் பட அத்திப்பட்டியை போல் மூழ்கி விடுமோ?" - விழி பிதுங்கி நிற்கும் கிராம மக்கள்

x
  • கடல் அலையின் வேகத்தால் கரைகள் முழுவதும் அரிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நெல்லை கூடுதாழை கிராம மக்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர்...
  • கடந்த 13 வருடங்களில் தங்களை சுற்றி உள்ள மற்ற கிராமங்களில் மட்டும் தூண்டில் வளைவு அமைத்து விட்டு, தங்கள் கிராமம் சிறியதாக இருப்பதால் அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
  • அசுர வேகத்தில் அடிக்கும் அலையால் கரைகள் அரிக்கப்பட்டு படகுகளை கூட நிறுத்த வழியின்றி தவிக்கும் இக்கிராம மக்கள், அரை வயிறு கஞ்சி குடிக்கக் கூட அல்லல் படுவதாக அழுது புலம்பி சாலை மறியல் செய்ய முற்பட்டனர்...
  • தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற நிலையில், அதற்கு அக்கிராம மக்கள் உடன்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்