51 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தைப்பூச தேர்த் திருவிழா... அமைச்சர் மதிவேந்தன், ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் பங்கேற்பு

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பூசத் தேர்த் திருவிழா நடைபெற்றது.

பக்தர்களின் பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, அறநிலையத் துறை சார்பில் தைப்பூச தேரோட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், இன்று ஆறுமுகசாமி தேவசேனா தேரோட்டத்தை வனத்துறை அமைச்சர் மதி வேந்தன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாபி சிங் உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடக்கி வைத்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்