அடிபணிந்த ஆஸி. - இந்தியா இன்னிங்ஸ் வெற்றி..!

x
  • ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
  • சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு, சிறப்பான ஃபார்மில் உள்ள வீரர்கள் என பல்வேறு சாதகங்களுடன் களமிறங்கிய இந்தியா, போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
  • இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அஞ்சி பிரத்யேகப் பயிற்சி எல்லாம் எடுத்து களம் கண்ட ஆஸ்திரேலியாவிற்கு, முதல் இன்னிங்ஸ் எதிர்பார்த்தபடி அமையவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்குத் திரும்பிய ஜடேஜா, ஆஸ்திரேலியாவை ஆட்டம்காண வைத்தார்.
  • 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்த, 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா...
  • அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியாவில் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புணர்ந்து சதம் விளாச, ஆல்-ரவுண்டர்கள் ஜடாஜாவும் அக்சர் படேலும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்
  • இதனால் முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்தது இந்தியா.. ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 223 ரன்கள் முன்னிலை... சுழற்பந்துவீச்சாளர் முர்பி 7 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் அளித்தார்.
  • ஆஸ்திரேலியாவின் 2வது இன்னிங்சும் முதல் இன்னிங்சின் நகல் ஆகத்தான் இருந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சூறாவளித் தாக்குதல் நடத்த அதிர்ந்துபோனது ஆஸ்திரேலியா...
  • அஸ்வினின் அபாயகர சுழலை என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர் ஆஸ்திரேலிய பேட்டர்கள்...
  • ஓபனர்கள் வார்னர் மற்றும் கவாஜாவை அஸ்வின் அவுட்டாக்க, நம்பிக்கை நட்சத்திரமான லபுஷேனை நேர்த்தியான வீச்சில் வெளியேற்றினார் ஜடேஜா...
  • வருவதும் காலில் பந்தை வாங்கி LBW ஆவதும் என ஆஸ்திரேலிய வீரர்கள் களத்திற்கும் பெவிலியனுக்கும் அணிவகுப்பு நடத்த, சீட்டுக்கட்டுபோல சரிந்தது ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை...
  • 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின்...
  • ஸ்மித் மட்டும் ஒரு முனையில் நின்று போராட முயன்றாலும், மறுமுனையில் அவருக்கு யாரும் கைகொடுக்காததால் 91 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆனது. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை ஈட்டியது...
  • கணிப்புகளின்படி 3 நாட்களிலேயே போட்டி முடிந்துபோக, ஆஸ்திரேலியாவை நாக்பூரில் நாக்கு தள்ள வைத்துள்ளது இந்தியா... அரைசதம் மற்றும் 7 விக்கெட் வீழ்த்தி கம்-பேக் கொடுத்த ஜடேஜா, ஆட்டநாயகன் விருதை வென்றார்.
  • தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்தியா, 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்