ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்காக நேற்று பட்டியலிடப்பட்டன.

ஆனாலும், உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் ஆணையர்களை கொலிஜீய முறையில் நியமிக்க கோரிய மனுக்களை விசாரித்ததால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை இன்று வியாழன் காலை 10.30 மணிக்கு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி கே.எம். ஜோசப், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதியிடம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்