தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால், மருத்துவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு தாலுகா மக்கள் சிகிச்சை பெற மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கே வருகின்றனர். இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் மின்சார கேபிள் எரிந்து பழுதானதால், மதியம் 1 மணியிலிருந்து மின்தடை ஏற்பட்டது. பகலில் சமாளித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், நோயாளிகளின் உறவினர்கள் மொபைல் போனில் காட்டும் வெளிச்சத்திலும் சிகிச்சை அளித்தனர். காயமடைந்து வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யவே தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாதுறை அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

TN Secretariat Smoke தலைமை செயலகம் அருகே வெளியேறிய நச்சுப்புகை - சென்னை கலெக்டருக்கு சென்ற உத்தரவு

Police Investigation | விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர்.. வீடு திரும்பியதும் திடீர் மரணம்

Praveen Chakravarty | தொடங்கிய வேட்புமனுக்கள் பரிசீலனை.. பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு ஏற்பு

Minister Keerthana | TVK | South Korea | முதல் அரசுமுறைப் பயணம் - தென்கொரியாவில் முக்கிய மீட்டிங்

TVK Congress | வேட்பாளர்களை நிறுத்தாத திமுக, அதிமுக - போட்டியின்றி தேர்வாகும் பிரவீன் சக்கரவர்த்தி