கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கார் மீது பைக் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த அஜித் குமார், தனது நண்பருடன் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் பைக்கில் சென்றுள்ளனர்.
அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற கார் மீது பைக் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவரும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். இதில் இளைஞர்கள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.