தென் கொரியாவுக்கு இந்த நிலைமையா? - மரண அடி.. அடையாளமே தெரியாமல் மாறிய பேரதிர்ச்சி
வெளுத்து வாங்கிய கனமழையால் தென் கொரிய தலைநகரான சியோல் அருகேயுள்ள சுங்சியோங் மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் சாலைகளும், நதி நீரும் இருந்ததற்கான அடையாளம் தெரியாத அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இந்நிலையில், ஆங்காங்கே வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டதோடு, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை கனமழைக்கு இருவர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் கனமழை தொடர கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மழை வெள்ளம் காரணமாக அங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.