Weather Update | TN Rain | "வெளுக்கப் போகும் கனமழை.." - 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது..
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை, விருதுநகர், தென்காசி தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.