Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.11.2025) | 6AM Headlines | ThanthiTV

Update: 2025-12-09 00:42 GMT
  • இண்டிகோ விமான சேவை, நிறுவனத்தின் உள் திட்டமிடல் பிரச்சினை காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம் அளித்தார்...
  • விமான சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் அசெளகரியத்திற்கு ஆழ்ந்த வருத்தமும் மன்னிப்பும் தெரிவிப்பதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
  • இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முறையிடப்பட்ட வழக்கை , அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது...
  • கேரளாவில் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் நிரபராதி என, எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...
  • நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நியாயம் வென்றுள்ளதாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்...
  • ஜப்பானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது...
  • ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன...
  • வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் மக்களவையில், நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்...
  • மேற்கு வங்க தேர்தலை முன்வைத்தே வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம் நடப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்...
  • சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்...
  • நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் ஆயிரத்து 20 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்ததாக பொறுப்பு டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதிய விவகாரம்...

Tags:    

மேலும் செய்திகள்