Today Headlines | மாலை 6 மணி தலைப்புச்செய்திகள் (05.11.2025)| 6 PM Headlines | Thanthi TV

Update: 2025-11-05 13:03 GMT

அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...

மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது... கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...

2026 சட்டமன்ற தேர்தலில், தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... தவெக கூட்டணி குறித்து முடிவெடுக்க, பொதுக்குழுவில், விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது....

கரூரில் செயற்கையான இடர்பாடுகள் ஏற்படுத்தப்பட்டதா? என சந்தேகம் எழுவதாக, தவெக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்...

விஜய் கூட்டங்களுக்கு அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... தமிழ்நாட்டில் பொது பிரச்சினை குறித்து கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது...

பீகாரில் 121 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது... வாக்கு மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...

நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, ஹரியானாவில் 8 வாக்காளர்களில் ஒருவர் போலி வாக்காளர் என குற்றம்சாட்டியுள்ளார்... ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் சேர்க்கப்பட்ட‌து எப்படி? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்...

பீகாரில் தேர்தல் நடக்கும் நேரத்தில் கவனத்தை திசை திருப்ப ஹரியானா விவகாரம் புனையப்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார்... ராகுல் காந்தி தனது தோல்வியை மறைக்க வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் விமர்சித்துள்ளார்...

ஹரியானவில் வாக்குத்திருட்டு நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை ஆதரித்து முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...

சென்னை தலைமைச் செயலகத்தில், மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துகட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.... அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்