மத்தூர் கல்வீச்சு, கலவரம் - 144 தடை உத்தரவு அமல்
கர்நாடகாவின் மத்தூர் பகுதியில் கலவரத்தை தொடர்ந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமின்றி தெருக்கள், சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கற்கள் வீசப்பட்டதாக கூறி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதன் காரணமாக மத்தூர் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க கர்நாடகா காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.