நேருக்கு நேர் மோதிய பள்ளி வேன் & பேருந்து | தரைப்பாலத்தில் சென்றபோது அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் ரயில்வே தரைப்பாலத்தை ஒரே நேரத்தில் கடக்க முயன்ற தனியார் வேனும், தனியார் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், தனியார் வேனில் இருந்த 2 பெண்களும், தனியார் பள்ளி பேருந்தில் இருந்த 2 குழந்தைகளும் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.