திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மழை நின்றும், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் தேங்கியுள்ள மழைநீர் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாய்க்கால்களில் மண்டி கிடக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.