Poscocase| குழந்தை பெற்றெடுத்த மாணவிகள்..! இளைஞரை தட்டி தூக்கிய போலீசார்
குழந்தை பெற்றெடுத்த மாணவிகள்..! இளைஞரை தட்டி தூக்கிய போலீசார்
உதகையை சேர்ந்த பிரவீன் என்பவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் நீலகிரிஅரசு கல்லூரியில் படித்து வந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரையும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் இருவரையும் காதலித்து வந்த பிரவீன், மாணவிகளிடம் அவ்வப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, தனிமையில் இருந்துள்ளார்.இதன் விளைவாக கல்லூரி மாணவிக்கு ஆண் குழந்தை பிறக்கவே, அவரை திருமணம் செய்து கொண்டு, பள்ளி மாணவியை பிரவீன் கழட்டிவிட்டுள்ளார். இதற்கிடையில் பள்ளி மாணவிக்கு வயிற்று வலி என மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே, அவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பிரவீன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த உதகை மகளிர் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். காதல் என்கிற போர்வையில் மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய இளைஞனால், 2 பச்சிளம் குழந்தைகளுடன் என்ன செய்வதன்று தெரியாமல் பாதிக்கப்பட்டோர் தவித்து வருகின்றனர்.