Modi | Mauritius PM | உலக தலைவரை வாரணாசிக்கு வரவழைத்து மோடி செய்த மாஸ் சம்பவம்

Update: 2025-09-11 09:14 GMT

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மொரிஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமை, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முன்னதாக வாரணாசி வந்திறங்கிய பிரதமர் மோடியை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். மொரிஷியஸ் பிரதமருடனான தனது சந்திப்பிற்கு முன்பு, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். அப்போது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்