நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை முசாபுரி பகுதியில், வீட்டுக் கூரையின் மீது நெளிந்து வந்த பாம்பை கீரி ஒன்று வேட்டையாட முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் எவ்வளவோ போராடிய பாம்பு, இறுதியாக கீரியிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் ஓடியதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் பாம்பின் உடலை கீரி கடித்து, தலையை கவ்விய காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.